கடைசி நேரத்தில் தள்ளிப்போன ரியோ படத்தின் வெளியீடு: உருக்கமாக பதிவிட்ட ரியோ
பிளான் பண்ணி பண்ணனும் படம் வெளியாகாதது குறித்து நடிகர் ரியோ தனது சுட்டுரைப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


பிளான் பண்ணி பண்ணனும் படம் வெளியாகாதது குறித்து நடிகர் ரியோ தனது சுட்டுரைப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
'பானா காத்தாடி', 'செம போத ஆகாதே' போன்ற படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பிளான் பண்ணி பண்ணனும். இந்தப் படத்தில் பிக்பாஸ் ரியோ கதாநாயகனாக நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர், பால சரவணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
இதுகுறித்து நடிகர் ரியோ தனது சுட்டுரைப் பக்கத்தில், இந்த அன்பிற்கு நன்றி. தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் இன்று வெளியாகவில்லை. விரைவில் வெளியிட அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது. எப்பவும் கூடவே இருந்துருக்கீங்க இப்பவும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...