மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அதிவேகமாக 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்த ’பேர் வச்சாலும்’ பாடல்

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தின் பாடல்களில் ஒன்றான ‘பேர் வச்சாலும்’ பாடல் அதிவேகமாக 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

News image

'டிக்கிலோனா' திரைப்படத்தின் புதிய டிரைலர்

Updated On :27 செப்டம்பர் 2021, 11:03 am

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தின் பாடல்களில் ஒன்றான ‘பேர் வச்சாலும்’ பாடல் அதிவேகமாக 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் , அனேகா உள்ளிட்டோர் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படம் விமர்சன ரீதியாக  விமர்சிக்கப்பட்டாலும் அதில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும்’ பாடல் இணையத்தில் கொண்டாடப்படுவதுடன் பெரிதாக வைரலாகி வருகிறது.

1990 ஆம் ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த இப்பாடலை யுவன் சங்கர் ராஜா சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி 'டிக்கிலோனா’ படத்தில் பயன்படுத்தினார்.

பாடல் வரிகளுடன் நடனக்காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்,  தற்போது 2 கோடி முறைக்கு மேல் யூடியூப் பக்கத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.