6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கே.ஜி.எப் -2 வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகர் யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது

News image
கே.ஜி.எப் -2 வெளியீடு தேதி அறிவிப்பு
Updated On :23 ஆகஸ்ட் 2021, 5:51 am

DIN

நடிகர் யஷ் நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. 

இந்தியாவில் இதுவரை வெளியான சண்டை படங்களில் தனித்த இடம் பிடித்த கே.ஜி,எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி இருக்கும் நிலையில் அதன் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பார்வையும் , டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று  ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தாலும் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

கரோனா தொற்று காரணமாக சில மாநிலங்களில் மூடப்பட்டிருந்த  திரையரங்குகள் படிப்படியாக  திறக்கப்பட்டு வரும் நிலையில் 2022 - ஏப்ரல் 14 அன்று 'கே.ஜி.எப் 2' திரைப்படத்தை திரையரங்கில்  வெளியிட இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் படக்குழு தெரிவித்திருக்கிறது.

மேலும் இப்படத்தில் சஞ்சய் தத் , பிரகாஷ் ராஜ் , ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.