நடிகர் சூரி தனது முகநூல் பக்கத்தின் மூலம் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் தனி இடம் பிடித்தவர் நடிகர் சூரி. தனக்கென ஒரு தனி பாணியில் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை செய்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று நடிகர் சூரியின் பிறந்த நாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில், ''ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன். உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன்.

என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி. அடுத்த ஜென்மத்தில் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி'' என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூரியும் அவரது தம்பியும் இரட்டை சகோதரர்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!

மும்மொழித் திட்டத்தை தவெக அரசும் எதிர்க்க வேண்டும்: கனிமொழி

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

