வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

''தலனு சொல்லாதிங்க'' : ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள்

தல என்று என்னை அழைக்காதீர்கள் என நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:35 am

DIN

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரவும் காலங்களில் என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ எழுதும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. 

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.  உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.