
நடிகரும் நகைச்சுவைக் கலைஞருமான கார்த்திக் குமாரை நடிகை அம்ருதா சீனிவாசன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மேயாத மான், தேவ், கள்ளச் சிரிப்பு போன்ற படங்களில் நடித்தவர் அம்ருதா சீனிவாசன். அலைபாயுதே, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் போன்ற படங்களில் நடித்தவர் கார்த்திக் குமார். தனக்குச் சரியான கதாபாத்திரங்கள் கிடைக்காததால் திரைத்துறையிலிருந்து விலகுவதாகவும் சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் அறிவித்தார். பாடகி சுசித்ராவைத் திருமணம் செய்த கார்த்திக், பிறகு அவரை விவாகரத்து செய்தார். ஸ்டாண்ட் அப் காமெடியனாக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் கார்த்திக் குமாரும் அம்ருதாவும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். இத்தகவலை இருவரும் சமூகவலைத்தளங்களில் அறிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.