மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நடிகர் வடிவேலுவைத் தொடர்ந்து இயக்குநர் சுராஜுக்கும் கரோனா 

வடிவேலுவுடன் லண்டன் சென்று திரும்பிய இயக்குநர் சுராஜுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 டிசம்பர் 2021, 2:19 pm

வடிவேலுவுடன் லண்டன் சென்று திரும்பிய இயக்குநர் சுராஜுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நகைச்சுவை நடிகா் வடிவேலு, தற்போது சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகா் ரிட்டா்ன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறாா். படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் பிரிட்டனுக்கு சென்றிருந்த வடிவேலு வியாழக்கிழமை சென்னை திரும்பினாா். 

விமான நிலையத்திலேயே அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் லேசான தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டாா்.

அவரைத் தனிமைப்படுத்தி மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். அவா் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடிவேலுவுடன் லண்டன் சென்று திரும்பிய இயக்குநர் சுராஜுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் குமரனுக்கு ஒமைக்ரான் ஆரம்ப அறிகுறி உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.