உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குநர் வம்சி

விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. 

Updated On :

விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார்.

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 65-வது படம்.

இந்நிலையில் விஜய்யின் 66-வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான தோழா படத்தை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி. விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்கவுள்ளார். இது பற்றி, தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் உறுதி செய்துள்ளார். கரோனா ஊரடங்குக்குப் பிறகு இதுபற்றிய செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் - வம்சி இணையும் படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. 

2007-ல் முன்னா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வம்சி இதுவரை தோழா உள்பட ஐந்து படங்களை இயக்கியுள்ளார். 2019-ல் மகேஷ் பாபு நடிப்பில் வம்சி இயக்கிய மஹர்ஷி, சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.