நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங் : வெளியான புகைப்படம்

பிறந்த நாளில் தனது காதலரான ஜாக்கி பக்னானி என்பவரை ரசிகர்களுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் அறிமுகப்படுத்தியுள்ளார்.  

News image
Updated On :11 அக்டோபர் 2021, 6:22 am

DIN

பிறந்த நாளில் தனது காதலரான ஜாக்கி பக்னானி என்பவரை ரசிகர்களுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் அறிமுகப்படுத்தியுள்ளார். 

தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகியாக நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

தற்போது சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த அயலான் திரைப்படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் மீண்டும் படப்பிடிப்புத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 10) அவர் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Story image

அவருக்கு ஜாக்கி பக்னானி என்ற நடிகர் வாழ்த்து தெரிவித்தார். அவரது பதிவில், நீயில்லாமல் என் நாட்கள் நாட்களாக இல்லை. நீயில்லாமல் சுவையான உணவு கூட மகிழ்ச்சி தரவில்லை. மக அழகான உயிருக்கு, என்னுடைய உலகமானவளுக்கு பிறந்தநாள் வாழத்துகள் என்று தெரிவித்தார். 

அதற்கு பதிலளித்த ரகுல், இந்த வருடத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்க்கையை வண்ணமாக்கியதற்கும், என்னை இடைவிடாது சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதற்கும் நன்றி. நம் இணைந்து அழகான நினைவுகளை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இருவருக்கும் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடிகை ராஷி கண்ணா போன்ற பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.