கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி
/

ஆர்யன் கான் ஜாமீன் மனு: அக். 20-க்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் அக்டோபர் 20-ம் தேதிக்குத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 அக்டோபர் 2021, 1:32 pm


பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் அக்டோபர் 20-ம் தேதிக்குத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மும்பையை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் கடந்த 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட சிறப்பு நீதிபதி விவி பாட்டீல், தீர்ப்பை அக்டோபர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.