ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

பிக்பாஸில் கமலிடம் வசமாக சிக்கிய பாவனி: என்ன முடிவெடுக்கப்போகிறார் ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் பாவனியிடம் நாணயத்தை எடுத்தது குறித்து கமல் கேள்வி கேட்கிறார்.  

Published On :28 ஜனவரி 2024, 9:59 am IST

பிக்பாஸில் இந்த வாரம் தாமரைச் செல்வியின் நாணயத்தை ஸ்ருதி மற்றும் பாவனி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து பிரச்னை எழுந்தபோது, தாங்கள் திட்டமிடவில்லை என்றும் தற்செயலாக எடுக்கப்பட்டது என்றும் ஸ்ருதியும், பாவனியும் விலக்கினர். 

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரமோ தற்போது வெளியானது. அதில், கமல்ஹாசன் நாணயம் எடுக்கப்பட்டது குறித்து பாவனியிடம் விசாரிக்கிறார். அப்போது பேசும் கமல், பாவனி உண்மை என்பது யாரைப் பார்த்து சொன்னாலும் ஒரே தகவல் தான் இருக்கும். நீங்கள் பேசும்போது நான் திட்டமிடவில்லை என்கிறீர்கள். 

ஆனால் நாங்கள் பார்த்தது என்னவென்றால், நீங்களும், அவங்களும் இதை செய்யப்போகிறேன். இப்படி செய்யப்போகிறேன். அப்பொழுது நீ எடுத்துக்கோ என்பதை எல்லோரும் பார்த்தார்கள் என்கிறார். 

அப்போது குறுக்கிடும் பாவனி, இல்லை சார். எனக்கு இது தெரியாது. நாங்கள் திட்டமிடவில்லை என்று கூற, அதற்கு கமல், நீங்கள் பொதுவில் ஒப்புக்கொள்ள வெட்கப்படுகிறீர்கள். நாம் செய்தது சரியா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும்பொழுதுதான் மாற்றி மாற்றி பேசுவோம் என்று சற்று காட்டமாக கூறுகிறார். இதனையடுத்து இந்த விவாகரத்தில் கமல் என்ன முடிவெடுக்கிறார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரிந்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.