நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம்: கதாநாயகன் யார் தெரியுமா ?

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Published On :28 ஜனவரி 2024, 9:59 am IST

லிங்கா படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழில் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. கன்னடத்தில் சுதீப் நடித்திருந்த கோடிகொப்பா, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்திருந்த ஜெய் சிம்ஹா, ரூலர் ஆகிய படங்களை இயக்கினார். 

தற்போது கே.எஸ்.ரவிக்குமார் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' என்ற மலையளப் படத்தின் தமிழில் பதிப்பான 'கூகுள் குட்டப்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர்.எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. 

மற்ற கே.எஸ்.ரவிக்குமார் படங்களைப் போல பாசம், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் என கலந்துகட்டி உருவாகவிருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.