விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சன் டிவி செய்திவாசிப்பாளர் கண்மணி கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிற போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இயக்குநர் அகத்தியனின் மகளும், இயக்குநர் திருவின் மனைவியுமான கனி மற்றும் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சுனிதா, நடிகை ஷகீலாவின் மகள் மிலா, விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சீசனில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அனிதா சம்பத்தின் இயல்பான நடவடிக்கைகள் ரசிகர்களைக் கவர்ந்தது.
அந்த வகையில் இந்த முறை சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருக்கும் கண்மணி கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருடன் கோபிநாத் ரவி, ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.