4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சர்வைவர் நிகழ்ச்சியில் விபத்து: காப்பாற்ற ஓடிய அர்ஜூன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் விபத்து ஏற்படுவது போல் காட்டப்படும் ப்ரமோ வைரலாகி வருகிறது. 

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 11:21 am

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த பார்வதி நேற்று முன் தினம் எலிமினேட் ஆனார். 

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 28) புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க போட்டி நடைபெறுகிறது. போட்டியாளர்கள் தோளில் அதிக எடையைத் தாங்க வேண்டும். யார் அதிக நேரம் தாங்கி இருக்கிறார்களோ அவர்களே போட்டியில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

இந்தப் போட்டியில், காடர்கள் குழுவில் இருந்து உமாபதி ராமையா, ராம் ஆகியோரும், வேடர்கள் குழுவில் இருந்து நந்தா மற்றும் ஐஸ்வர்யா மோதுகின்றனர். சிறிது நேரத்துக்கு ஒருமுறை எடைக் கூட்டப்படுகிறது. இந்த நிலையில் ஒரு போட்டியாளர் எடையைத் தாங்க முடியாமல் கீழே விழுகிறார். நடிகர் அர்ஜூன் ஓடி சென்று பிடிக்க முயல்கிறார். கீழே விழும் போட்டியாளர் யார் , அவருக்கு என்ன ஆனது என்ற தகவல்கள் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் மட்டுமே தெரியவரும். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.