விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஷாலின் 'லத்தி' பட முதல் பார்வை போஸ்டர் இதோ

விஷால் நடித்துள்ள லத்தி பட முதல் பார்வை போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். 

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 12:05 pm

வீரமே வாகை சூடும் படத்துக்கு பிறகு விஷால் தற்போது லத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கின்றனர். 

இந்தப் படத்தை வினோத் குமார் எழுதி இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமமைக்கிறார். 12வது முறையாக இந்தப் படத்துக்காக நடிகர் விஷாலும் - யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்துள்ளனர். 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் விஷால் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வழக்கமான விஷால் படங்களைப் போல இந்தப் படமும் சண்டைக்காட்சிகள் அதிகம் நிறைந்த படமாக உருவாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.