நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் - செல்வராகவனின் 'சாணிக் காயிதம்' - டீசர் இதோ

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள சாணிக்காயிதம் பட டீசர் வெளியானது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:35 am

DIN

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'ராக்கி' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

இதனையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் 'சாணிக் காயிதம்'. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த நிலையில் 'சாணிக் காயிதம்' திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற மே 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்துக்கு யாமினி யுகமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  இந்தப் படத்தின் டீசரில் கருப்பு வெள்ளை காட்சிகள், வன்முறை என அருண் மாதேஸ்வரனின் முந்தைய படமான ராக்கி படத்தை அதிகம் நினைவுபடுத்துகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.