அஜித்தின் 'வலிமை' மே 1-ல் ஒளிபரப்பு: எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தகவல் வெளியாகியுள்ளது.


ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்திருந்த வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் நல்ல வசூலை இந்தப் படம் பெற்றது.
ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படம் ஜி5 ஓடி தளத்தில் மார்ச் 25 ஆம் தேத வெளியானது.
தற்போது படம் வெளியாகி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தொழிலாளர்கள் தினம் மற்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6.30 மணிக்கு முதல்முறையாக ஒளிபரப்பாகும் என அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

வலிமை படத்தில் இயக்குநர் வினோத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாடல்களுக்கு மட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். இந்தப் படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள ஏகே 61 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...