எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மீண்டும் நிர்வாணமாக ‘போஸ்’ கொடுக்க முடியுமா? ரன்வீருக்கு பீட்டா அழைப்பு

நடிகர் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க அழைத்திருக்கிறோம் என பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
ரன்வீர் சிங்
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:21 am

DIN

நடிகர் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக 'போஸ்' கொடுக்க அழைத்திருக்கிறோம் என பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் ரன்வீர் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் புரோமோஷனுக்காக நிர்வாணமாக இருக்கும் படங்களைப் பதிவிட்டிருந்தார். இச்செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் எதிர்ப்புகள் உருவாகின. அதனைத் தொடர்ந்து ஆலியா பட், அர்ஜூன் கபூர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அவருக்கு ஆதரவாக கருத்தும் தெரிவித்தனர்.

மேலும், இந்தப் புகைப்படங்கள் குறித்து ரன்வீர் மேல் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில், விலங்குகள் நல அமைப்பான பீட்டா, விலங்குகளை உணவிற்காகக் கொல்லக்கூடாது என்கிற ’ட்ரை வேகன்’ பிரச்சாரத்திற்காக தங்கள் அட்டைப் படத்தில்  நிர்வாணமாக நடிக்க முடியுமா?  என  நடிகர் ரன்வீர் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் எங்கள் இதழிற்கு ரன்வீர் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரன்வீர் சிங் தரப்பில் எந்த மறுப்பும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.