பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரங்கராட்டினம்’ ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | 'ஜெயிலர்' படப்பிடிப்பு எப்போது? ரஜினி சொன்ன தகவல்
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான ‘ரங்கராட்டினம்’ பாடலை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். பாடகர் அறிவு எழுதிய அப்பாடலின் வரிகளும், நடனமும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
கிஷோர் குமார் ஒளிப்பதிவில் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு பட இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.
’நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



