காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'கிரிக்கெட் பேட்ல விளையாடுங்க... '' - கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு லெஜண்ட் நாயகி பதிலடி

லெஜண்ட் பட நாயகி ஊர்வசி ரௌடேலா கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 8:02 am

DIN

லெஜண்ட் பட நாயகி ஊர்வசி ரௌடேலா கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஊர்வசி ரௌடேலா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தில்லியில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். ஆர்பி என்பவர் நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து என்னை சந்திக்க விரும்பினார். 

நான் 10 மணி நேரம் நன்றாக தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்தபோது எனது போனுக்கு 16 -17 மிஸ்டு கால்கள் வந்திருந்தது. எனக்காக ஒருவர் காத்திருந்தபோது என்னால் சந்திக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது. நான் அவரிடம் நீங்கள் மும்பை வரும்போது சந்திப்போம் என்றேன். பிறகு மும்பையில் சந்தித்தோம். சில தேவையற்ற நிகழ்வுகள் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தார். 

Story image

இதற்கு பதிலளிக்கும் விதமாக ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், சிலர் புகழ் வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு இப்படி பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அந்தப் பதிவை நீக்கி விட்டார். 

இந்த நிலையில் ஊர்வசி ரௌடேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், கிரிக்கெட் பேட் பந்துடன் விளையாடுங்கள். அமைதியாக இருக்கும் பெண்ணிடம் உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.