ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

''படம் ஓடாததற்கு காரணம் ஹீரோவின் திமிர் பேச்சு'' - திரையரங்க உரிமையாளர் அதிரடி

படம் ஓடாததற்கு ஹீரோவின் திமிர் பேச்சுதான் காரணம் என பிரபல திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 9:36 am

DIN

படம் ஓடாததற்கு ஹீரோவின் திமிர் பேச்சுதான் காரணம் என பிரபல திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்று கூறப்படுகிறது. 

Story image

முன்னதாக லைகர் படத்தைப் புறக்கணியுங்கள் என்று கூறி பாய்காட் லைகர் என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தனர். இதுகுறித்து விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டபோது 'என் படத்தைப் பிடித்தால் பாருங்கள்' என்று கூறியிருந்தார். 

திரையரங்க உரிமையாளர் மனோஜ் தேசாயுடன் விஜய் தேவரகொண்டா

திரையரங்க உரிமையாளர் மனோஜ் தேசாயுடன் விஜய் தேவரகொண்டா

இந்த நிலையில் படம் ஓடாததற்கு  விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சுதான் காரணம், நடிகர்கள் ரசிகர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும் என மும்பையைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் மனோஜ் தேசாய் தெரிவித்தார். அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனைக் கேள்விப்பட்ட விஜய் தேவரகொண்டா உடனடியாக மும்பை விரைந்து மனோஜ் தேசாய்யை சந்தித்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.