சீரியல் நடிகையுடன் அஜித் குமார்! குடும்பத்துடன் பகிர்ந்த புகைப்படம்

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். 
சீரியல் நடிகையுடன் அஜித் குமார்! குடும்பத்துடன் பகிர்ந்த புகைப்படம்

எச். வினோத் இயக்கத்தில் உருவான துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். 

வெள்ளை நிற நீள தாடியுடன் காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு மாஸாக இருந்த அஜித் குமார் தற்போது நேர் எதிராக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். 

பஞ்சாபில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு துணிவு படம் உருவாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து துணிவு படத்துக்காக எச்.வினோத், அஜித்குமார், போனி கபூர் கூட்டணி அமைத்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தற்போது, பொங்கலுக்கு வெளியாகத் தயாராகவுள்ளது. இதனிடையே துணிவு கெட்டப்பில் நடிகர் அஜித் குமார் இருசக்கர வாகனத்தில் சில பயணங்களை மேற்கொண்டார்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். மீசை, தாடியை எடுத்து தலை முடியின் நிறத்தையும் மாற்றியுள்ளார். இந்த தோற்றத்தில் சீரியல் நடிகையின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். 

அந்தப் படம் தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அஜித்குமார் தற்போது பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போன்று மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com