தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நடிகை! குவியும் விமர்சனங்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகையின் புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

News image

நோரா ஃபதேஹி

Updated On :2 டிசம்பர் 2022, 11:59 am

DIN


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

உலகக் கோப்பை கால்ப்பந்து போட்டிகள் இந்தோனேஷிய தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை பலர் நேரில் கண்டு களித்து வருகின்றனர். 

இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியின்போது கடந்த மாதம் 29ஆம் தேதி, நடிகை நோரா ஃபதேஹியின் நடனம் இடம்பெற்றது. இதனை ரசிகர்கள் பலர் கண்டு களித்தனர். 

இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசியக் கொடியை அவர் தாங்கிப்பிடித்தார். அப்போது பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு நிறமுடைய தேசியக் கொடியை அவர் தலைகீழாக திருப்பிப் பிடித்தவாறு நடந்தார். 

இந்த விடியோ இணையத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அரங்கில் இருக்கும்போது தேசியக் கொடியை தாங்கிப்பிடிப்பதில் இத்தனை மெத்தனமா? என ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.