காதல் தேசம் திரைப்படம் இன்று தெலுங்கில் மறுவெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் அப்பாஸ், வினித், தபு, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘காதல் தேசம்’
நண்பர்களான அப்பாஸ், வினித் இருவரும் ஒரே பெண்ணை(தபு) காதலிக்கிறார்கள். இருவருக்கும் இது தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பதை காதல், நட்பு என சொல்வதே இப்படத்தின் கதை.
இதையும் படிக்க: ஆசியன் அகாதெமி விருது பெற்றார் இயக்குநர் பாசில் ஜோசஃப்
அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் இப்படம் பெற்றது.
குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘முஸ்தபா..முஸ்தபா’, ‘என்னைக் காணவில்லையே நேற்றோடு’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருபவை.
இந்நிலையில், தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட திரைகளில் ‘பிரேம தேசம்’ என்கிற பெயரில் இப்படத்தை இன்று மறுவெளியீடு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க மம்தா வலியுறுத்தல்

பரமக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆழ்வாா்திருநகரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


