‘ரஞ்சிதமே’ பாடலின் சாதனை!
வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில் இதுவரை 9 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்கிற படத்தில் விஜய் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - தமன். இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: ‘லவ் டுடே’ இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய்?
சமீபத்தில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய், மானசி இணைந்து பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 9 கோடி (90 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சிம்பு குரலில் வெளியான ‘தீ தளபதி’ பாடல் யூடியூபில் 2 கோடி (20 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது.
இசையமைப்பாளர் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘தீ’ எமோஜியை பதிவிட்டுள்ளார்.