
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் தற்போது அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று ஞாயிற்றுக்கிழமை (டிச.11) மதுரையில் நடைபெற உள்ளதாகவும் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேங்க்ஸ்டர் பாணியில் உருவாகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக இருப்பார் என்றும் தகவல்.
இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர்கள், நடிகைகள் குறித்தும் மாலைதான் தெரியவரும்.