துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

'கனெக்ட்' படத்தின் புதிய அப்டேட்: விக்னேஷ் சிவன் தகவல் 

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:39 pm IST

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கனெக்ட்' திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

'கனெக்ட்' திரைப்படத்திம் சிறப்பு காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. நடிகை நயன்தாரா, அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் மற்றும் அப்படத்தில் நடித்த  நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.

சிறப்பு காட்சிக்கு பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், "முதன்முதலாக இடைவெளி இல்லாத ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். டிசம்பர் 22 ஆம் தேதி 300 திரையரங்குகளில் வெளியாகும். நல்லவிதமாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். குழந்தைகளை நயன்தாரா நன்றாக பார்த்து கொள்கிறார்" என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.