மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

’வாரிசு’ இசை வெளியீட்டு விழா.. ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?

வாரிசு இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :22 டிசம்பர் 2022, 10:41 am

வாரிசு இசை வெளியீட்டு விழா டிக்கெட் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். குஷ்பு, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள்(டிசம்பர் 24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெறும். அதில், விஜய்யின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும்.

வழக்கமாக, விழாவில் கலந்துகொள்வதற்கான டிக்கெட்கள் ரசிகர் மன்றம், பத்திரிகையாளர்கள், படக்குழுவினர் ஆகியோருக்கு வழங்கப்படும். இந்நிலையில், வாரிசு இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ஒரு டிக்கெட்டிற்கு ரூ.4,000 வரை சிலர் வசூலிக்கப்பதாக இணையத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக பிரமாண்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறாததால், விஜய்யின் பேச்சை கேட்க அவரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.