இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

'விடுதலை' படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

News image
Updated On :31 டிசம்பர் 2022, 5:05 am

DIN

‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். 

இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.        

Story image

இந்நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை  வெளியாகியுள்ளது.

Story image

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.