

சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். நடிகர்கள் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்டது.
இதையும் படிக்க | முதலிடத்தில் சன் டிவியின் 3 தொடர்கள்: விஜய், ஜீ தமிழ் நிலை இதுதான்?
தற்போது கரோனா சூழல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியாவதற்குத் தயாராக இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியீட்டுத் தேதியை அறிவித்து வருகின்றன. டான், ஆர்ஆர்ஆர் படங்கள் மார்ச் 25-ம் தேதி வெளியாகவுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.