மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சிறப்பு படங்களை பகிர்ந்த சன் பிக்சர்ஸ்

எதற்கும் துணிந்தவன் படத்தின் சிறப்பு புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:11 am

DIN


சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' மார்ச் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. சன் பிக்ரச்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். 

முன்னதாக சூர்யா தயாரித்து நடித்த பசங்க 2 படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தையும் சூர்யா தயாரித்திருந்தார். இந்த நிலையில் மூன்றாவது முறையாக பாண்டிராஜ் மற்றும் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்துள்ளனர். 

Story image
Story image
Story image

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். நந்தா, வாரணம் ஆயிரம் படங்களுக்கு பிறகு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு சூர்யாவுடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தின் சிறப்புப் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.