6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்குடியில் பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் பட படப்பிடிப்பு

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் துவங்கியது. 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:29 am

DIN

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள 'டான்' திரைப்படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். மேலும், பால சரவணன், மிர்ச்சி விஜய், சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்ஜேசூர்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. 

Story image

இந்தப் படத்தையடுத்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஜதி ரத்னாலு பட இயக்குநர் அனுதீப் இந்தப் படத்தை இயக்குகிறார். நடிகர் சத்யராஜ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்தின் பூஜை இன்று(பிப்ரவரி 10) நடைபெற்றது. பூஜையின் போது எடுக்கப்பட்ட படங்கள் வைரலாகி வருகிறது. இந்தப் படம் புதுச்சேரியைக் கதைக் களமாக கொண்டு உருவாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று முதல் துவங்குகிறது. பிரேம்ஜி இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.