மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

''என்றும் என்றென்றும்...'' - ரஜினிகாந்த் குறித்து இளையராஜாவின் புகைப்பட பதிவு: ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரஜினிகாந்த்துடன் இருக்கும் புகைப்படத்தை இளையராஜா பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 12:14 pm

சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த இசையமைப்பாளர் இளையராஜா அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். சில புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜாவின் தோளில் ரஜினி கைப்போட்டபடி இருக்க இருவரும் உரையாடிக்கொண்டிருக்கின்றனர். அவரது பதிவில் என்றும் என்றென்றும் என்று குறிப்பிட்டுள்ளார். 

அண்ணாத்த படத்துக்கு பிறகு ஹிந்திப் பட இயக்குநர் பால்கேவுடன் இணையவிருப்பதாக செய்திகள் வெளியானது. அப்படி நடந்திருந்தால் அந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பாளராக இருந்திருப்பார். ஏனெனில் பால்கியின் பல ஹிந்திப் படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.  

சில மாதங்களுக்கு இளையராஜாவின் புதிய இசைக் கூடத்திற்கு ரஜினிகாந்த் அடிக்கடி சென்று வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.