நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அஜித்தின் வலிமை படத்தில் மறைந்த நடிகர் ஜெய்சங்கர் ?

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 12:34 pm

DIN

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் மறைந்த நடிகர் ஜெய் சங்கரின் படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் நடிகர் அஜித்தின் அப்பாவாக அவர் காட்டப்படுவார் என்று கூறப்படுகிறது. 

ஜெய் சங்கரின் மகன் விஜய் சங்கரும் நடிகர் அஜித் குமாரும் நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல். ஆனால் ஜெய் சங்கருடன் ஒரு படத்தில் கூட நடிகர் அஜித் நடித்தது இல்லை. இந்த நிலையில் அந்தக் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வலிமை படம் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாம். குறிப்பாக படத்தில் அம்மா - மகன் தொடர்பான காட்சிகள் ரசிகர்களை கலங்க செய்யும் என்று கூறப்படுகிறது. 

வலிமை திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளதால், வட இந்தியாவில் இந்தப் படத்தை வெளியிடும் வேலை எளிதாகியிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.