பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கண்ணீருடன் பாதியில் வெளியேறிய வனிதா: காரணம் இதுவா?
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கண்ணீருடன் பாதியில் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கவுள்ளாராம்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வனிதா விஜயகுமார் பாதியில் வெளியேறியுள்ளார். அவர் என்ன காரணத்துக்காக வெளியேறினார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரமோவில் ''கதவைத் திறங்கள். நான் வெளியில் செல்ல வேண்டும்'' என்று வனிதா கதறுகிறார்.
அவரை அழைத்த பிக்பாஸ் என்ன காரணத்துக்கக வெளியேறுகிறீர்கள் எனக் கேட்க, உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன்'' என்று வனிதா தெரிவித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் அடிக்கடி கமல் சாருக்காகதான் இங்கே இருக்கிறேன் என்று வனிதா தெரிவித்து வந்தார். உண்மையில் அவர் தொகுத்து வழங்கவில்லை என்றதும் நிகழ்ச்சியின் தரம் குறைய வாய்ப்பிருக்கிறது என்பதால் வெளியேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சிம்பு கலந்துகொள்வது தெரியாமலேயே அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...