கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசயமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் வசனம் மற்றும் பாடலக்ளை விவேக் எழுதியுள்ளார்.
இந்தப் படத்திலிருந்து பொல்லாத உலகம் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்தப் படத்தின் டிரெய்லரை யார் வெளியிடப்போகிறார்கள் என யூகியுங்கள் என படக்குழு தகவல் பகிர்ந்திருந்தது.
இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கள் கணிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லரை சிம்பு வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Guess who is going to release #MaaranTrailer ? pic.twitter.com/zhYf6qUG0C
â Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 26, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தீவிரவாதிகளா? ரத்தம் வரும் அளவுக்கு போலீசார் அடிப்பதுதான் ஜனநாயகமா? மேயர் பிரியா

15 நாடுகளில் அதிகம் பார்க்கப்படும் படமான கட்டா குஸ்தி - 2?
புறங்கூறிப் பொய்யாக வாழ்வதைவிட இறப்பதே மேல்! எக்ஸ் பதிவில் யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?

உதயநிதி ஸ்டாலின் கைது: சேலத்தில் திமுகவினர் சாலை மறியல்!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



