பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர் சரத் குமார் வருவது போன்ற ப்ரோமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில், டிக்கெட் டூ பைனல் போட்டியில் வெற்றி பெற்ற அமீர் நேரடியாக பைனலுக்கு முன்னேறியுள்ளார். மீதமுள்ள 6 போட்டியாளர்களில் 4 பேர் மட்டுமே பைனலுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த வார எலிமினேசன் போட்டியில் 6 பேரும் உள்ளனர். இதில், இரண்டு பேர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், பிரபல நடிகர் சரத் குமார் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார்.
அவர் கையில் உள்ள சூட்கேஸில், ரூ. 3 லட்சத்திற்கான பரிசுத் தொகை இருக்கின்றது. இந்த பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டு தற்போதே யாரேனும் வெளியேற விரும்பினால், வெளியேறலாம் எனத் தெரிவிக்கின்றார்.
முந்தைய சீசன்களில் கேப்ரில்லா, கவின் உள்ளிட்டோர் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: ஆட்சியா் தலைமையில் மேற்பாா்வையாளா்கள், அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

நேபாள இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

