நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் பெரும் அச்சுறதுத்தலை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் இயக்குநர் ஆனந்த் வைத்தியநாதன் ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமானதாக அறிவித்திருந்தார். மேலும், நடிகர் அருண் விஜய், நடிகை மீனா ஆகியோர் தங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறைவான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிக்க | வலிமை வெளியீடு ஒத்திவைப்பு
இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
''ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு வணக்கம். எல்லா பாதுககாப்பு நடைமுறைகளை மேற்கொண்டும் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகளே இருக்கின்றன. என்னை நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுவதையும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் தடுக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


