பிரபல திரைப்பட நடிகை திரிஷாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை திரிஷா. தமிழில் நடிகர்கள் விஜய், அஜித்குமார், ஆர்யா, சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா பரவல்: குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப்பதிவில் அவர், தனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிய போதிலும், புத்தாண்டுக்கு சற்று முன்பு நான் கரோனாவால் பாதிக்கப்பட்டேன்” என பதிவிட்டுள்ளார்.
“இது எனது மிகவும் வேதனையான வாரங்களில் ஒன்றாக இருந்தாலும், எனது தடுப்பூசிகளால் நான் இன்று குணமடைந்து நன்றாக இருப்பதாக உணர்கிறேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டும், முகக்கவசம் அணிந்தும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் குணமடைந்து வீட்டிற்குத் திரும்புவேன் என்று நம்புகிறேன்” என நடிகை திரிஷா குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









