மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் : வெளியான போட்டோ

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் நிலையில் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :10 ஜனவரி 2022, 6:08 am

DIN

மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் விக்ரம் வேதா. இந்தப் படம் தற்போது ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் வேடத்தில் சயீஃப் அலிகானும் நடித்து வருகின்றனர். தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி தான் இந்தப் படத்தை ஹிந்தியிலும் இயக்கி வருகின்றனர். 

Story image

இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தோற்றத்தை அறிவிக்கும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே, ரோஹிட் சரஃப், யோகிதா பானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.