சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடல் விடியோ இதோ
பொங்கல் தின சிறப்பாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
டி.இமான் இசையில் இந்தப் படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள சும்மா சுர்ருனு பாடலின் சில நொடிகள் கொண்ட விடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முழு பாடலும் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#SummaSurrunu varuthu #ETThirdSingle
Releasing on Jan 16th @ 6 PM!
An @immancomposer musical
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

