காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

பிரபல இயக்குநர் படத்துக்காக இணையும் ஜுனியர் என்டிஆர் - அனிருத்

ஜுனியர் என்டிஆர் - அனிருத் இணையும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

News image
Updated On :16 ஜனவரி 2022, 8:30 am

ஜுனியர் என்டிஆர், ராம் சரண் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜுனியர் என்டிஆரின் 30வது படம் குறித்த தகவல்கள் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்தப் படத்தை கொரட்டால சவி இயக்கவிருக்கிறாராம். இந்தப் படத்தில் ஜுனியர் என்டிஆருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. 

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரட்டால சிவா தற்போது சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா படத்தை இயக்கியிருந்தார். வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் கரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.