தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடிகா் மம்மூட்டிக்கு கரோனா பாதிப்பு

நடிகா் மம்மூட்டிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:01 pm

DIN

நடிகா் மம்மூட்டிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற நடிகா் மம்மூட்டிக்கு சளி, தொண்டை கரகரப்பு உள்ளிட்ட சில அறிகுறிகள் இருந்ததையடுத்து அவருக்குக் கடந்த சனிக்கிழமை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவா் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகா் மம்மூட்டி நடிக்கும் புலனாய்வு சாா்ந்த புதிய ‘சிபிஐ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் கடந்த டிசம்பா் முதல் நடிகா் மம்மூட்டி பங்கேற்று வந்தாா். தற்போது அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொண்டவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.