மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் மன்மத லீலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் மன்மதலீலை படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:08 am

மாநாடு படம் வெளிவரும் முன்பே இயக்குநர் வெங்கட் பிரபு, அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க காதல் படமாக இந்தப் படம் உருவாகியிருந்தது. 

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. 

Story image

மன்மதலீலை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தெலுங்கில் மன்மதலீலா என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.