புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

'தயவுசெஞ்சு பகல்ல போட்டோ போடாதிங்க'- மாளவிகாவுக்கு ரசிகர் வேண்டுகோள் - அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?

ரசிகரின் கோரிக்கைக்கு மாளவிகா அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

News image
Updated On :1 ஜூலை 2022, 6:27 am

DIN

ரசிகரின் கோரிக்கைக்கு மாளவிகா அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றிபெற்றது. 

Story image

தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா நடித்த மாறன் திரைப்படம் ரசிகர்களைக் கவரவில்லை. புதிய படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துவருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதலங்களை கலக்கிவருகின்றன.

Story image

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், மக்கள் அதிகம் உள்ள பகல் நேரங்களில் புகைப்படங்களை பதிவிடாதீர்கள். சென்னையின் சாலைகள் பள்ளமாக இருக்கின்றன. நான் ஒரு பெரிய பள்ளத்தில் விழத் தெரிந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மாளவிகா நான் இதனை பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.