கோப்ரா படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் விக்ரம் நேரில் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரம் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார். அவர் மாரடைப்பு காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
இதனையடுத்து நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை. அவருக்கு நெஞ்சில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மக்கள் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
துருவ் விளக்கம்
மேலும் அவரது மகன் துருவ், அப்பாவுக்கு நெஞ்சில் அசௌகரியமாக உணர்ந்தார். அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறுகிறார். அவருக்கு மாரடைப்பு இல்லை. வதந்திகளை கேட்டு எங்கள் மனம் வலிக்கிறது.
அப்பா நலமாக இருக்கிறார். இன்னும் ஒருநாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். இந்த பதிவு சரியான விளக்கமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பொன்னியின் செல்வன் டீசர் விழா: புகைப்படங்கள்
பொன்னியின் செல்வன் டீசர்
ஆதித்யகரிகாலனாக விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் டீசர் நேற்று(ஜூலை 8) ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது.
கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் ?
இந்த நிலையில், கோப்ரா இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தல் நடைபெறவிருக்கிறது. நடிகர் விக்ரம் நேரில் கலந்துகொள்விருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!

மஹிந்திரா & மஹிந்திரா 4வது காலாண்டு லாபம் 48.5% உயர்வு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


