'குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவெடுத்தால் விருது' - நடிகர் ராம் சரணின் மனைவிக்கு ஜக்கி வாசுதேவ் அறிவுரை

குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவெடுத்தால் விருது அளிப்பேன் என நடிகர் ராம் சரணின் மனைவிக்கு ஜக்கி வாசுதேவ் உறுதியளித்தார். 
'குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவெடுத்தால் விருது' - நடிகர் ராம் சரணின் மனைவிக்கு ஜக்கி வாசுதேவ் அறிவுரை
Published on
Updated on
1 min read

குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவெடுத்தால் விருது அளிப்பேன் என நடிகர் ராம் சரணின் மனைவிக்கு ஜக்கி வாசுதேவ் உறுதியளித்தார். 

நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், மகதீரா, ஆர்ஆர்ஆர் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியிருக்கிறார். இவரது மனைவி உபசனா தொழிலதிபராக இருக்கிறார். 

திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவின் நிகழ்ச்சியில் ராம் சரணின் மனைவி உபசனா கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய உபசனா, ''நானும் என் கணவர் ராம் சரணும் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறோம். எங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை.

எங்களுக்கென சில கடமைகள் இருக்கிறது. ஆனால் நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாதது குறித்து எங்களது உறவினர்கள் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்'' என்று பேசியிருந்தார். 

அவருக்கு பதிலளித்த ஜக்கி வாசுதேவ், ''நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்தால் உங்களுக்கு எனது வாழ்த்துகள். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் முடிவெடுப்பவர்களை விருது அளித்து நான் பாராட்டுகிறேன். 

உலக மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்ல முடிவு. தற்போது மனித இனம் அழிவின் விளிம்பில் இல்லை. குழந்தை பெற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை'' என்று அவர் பதிலளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com