தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

சூர்யா மீது கடும் நடவடிக்கை கூடாது - ஜெய் பீம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஜெய் பீம் பட வழக்கில் சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Published On :

நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்தப் படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

இதனையடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு பதிவு செய்யப்படும் முன்பே சர்ச்சைக்குரிய காலண்டர் மாற்றப்பட்டதாக சூர்யா தரப்பின் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் புகார்தாரர் சார்பாக வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் இரண்டு வழக்கையும் சேர்ந்து விசாரிக்கவேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இந்த வழக்கு இன்று (ஜூலை 18) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 21 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.