ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கும் சிபி சத்யராஜின் வட்டம் பட டிரெய்லர் இதோ

கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள வட்டம் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

Updated On :

கமலக்கண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள வட்டம் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

மதுபானக் கடை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமலக்கண்ணன் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் வட்டம். இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு இணைந்து தயாரித்துள்ளனர். 

இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா, வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிவி ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது இந்தப் படம் திரில்லர் பாணியில் அமைந்துள்ளது தெரிகிறது. 

முன்னதாக டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்திருந்த O2 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.