கமல் படத்தில் நடிக்கும் உதயநிதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் படத்தில் நடிக்கும் உதயநிதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல்ஹாசன் தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார். 
Published on

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் வெளியிட்டார். 

இந்தப் படம் இந்திய அளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓடிடியில் இந்தப் படம் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளிலும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக பிற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்துவருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை கமல் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 15 ஆண்டு ரெட் ஜெயண்டின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com